vivo iqoo 3

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24 முதல் நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்து மொபைல் தயாரிப்பாளர்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனை இல்லாமல் பூஜ்யத்தை பதிவு செய்துள்ளது.

மாதந்தோறும் நாடுமுழுவதும் 11-12 மில்லியன் விற்பனை செய்யப்படும் நிலையில், மொபைல் தயாரிப்பாளர்கள் சாம்சங், சியோமி, உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளதால், எந்த மொபைலும் தயாரிக்கப்படாமல் பூஜ்யம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள கோவிட்-19 பரவலை தடுக்கும் ஊரடங்கு உத்தரவில் இந்த முறை சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மே 4 ஆம் தேதிக்குப் பிறகு பச்சை மண்டலங்களில் ஆன்லைன் விநியோகம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.