விரைவில் வெள்ளம் வருவதை ஸ்மார்ட்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களை ஸ்மார்ட்போன்கள் மூலம் முன்பே அறிந்து கொள்ளும் வசதி வந்த விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய டெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கொலின் பிரைஸ்,
ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார்கள், புவியிர்ப்பு விசை உள்பட சுற்றுச்சூழலை கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது உலகளவில் 3 முதல் 4 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த போன்கள் மூலம் வானிலை முன்னறிவிப்பு மட்டுமின்றி இயற்கை பேரிடர் குறித்த தகவல்களையும் அறியமுடியும் என்றார்.

இந்த ஆய்வு அறிக்கை வளிமண்டல மற்றும் சோலார்-டெரஸ்ட்ரியல் இயற்பியல் என்ற புத்தகத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது. இதை பிரிட்டனை மையமாக கொண்ட WeatherSignal என்று அழைக்கப்படும் அப்ளிகேஷன் ஆய்வு செய்துள்ளது