வசந்த கால சம இரவு நாள் தொடங்குவதனை கொண்டாடும் கூகுள் டூடுல்
Spring Equinox

உலகின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த கால சம இரவு நாள் (spring equinox) தொடங்குவதனை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுளை கூகுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. மேலும் தெற்கு அரைக்கோளம் பகுதியில் இலையுதிர் காலம் தொடங்குகின்றது.

வசந்த கால சம இரவு நாள் என குறிப்பிடப்படும் இன்றைக்கும் இரவு மற்றும் பகல் என இரண்டும் துல்லியமாக 12 மணி நேரம் இருக்கும். அதாவது ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் இவையும் ஒன்று. இந்த நாட்களை சம இரவுபகல் நாள் (Equinox) எனப்படுகின்றது.

வசந்த கால சம இரவு நாள் டூடுல்

புவியின் நிலத்தில் வடக்கு அரைக்கோளத்தில் பெரும்பகுதியும் ,  70 முதல் 75 சதவீதம் மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன. குறிப்பாக கண்டங்களின் அடிப்பைடையில் , ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களும், இந்தோனேசியாவின் ஒரு பகுதி தவிர்த்து பெரும்பாலான ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென் அமெரிக்கப் பகுதி மற்றும் மூன்றில் இரண்டு பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.

தெற்கு அரைக்கோளம்

25 சதவீத மக்கள் வாழுகின்ற பகுதியாக விளங்குகின்ற தெற்கில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் இந்தோனேசியாவின் சில பகுதிகள், ஆண்டார்ட்டிகா, பெருங்கடல்களான , அட்லான்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் மற்றும் அண்டார்ட்டிகா பெருங்கடல் ஆகியவை அமைந்துள்ளன.

வசந்த கால சம இரவு நாள் தொடங்குவதனை கொண்டாடும் கூகுள் டூடுல்

தமிழரின் பருவ காலம்

நமது தமிழர் வழக்கப்படி பருவகாலம் என்பது 6 முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாதங்களில் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு பருவ காலம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பருவ காலம் ஆங்கில நாட்காட்டியில் தமிழ் மாதங்கள்
இளவேனில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 சித்திரை, வைகாசி
முதுவேனில் ஜூன் 15 முதல் ஆகஸ்டு 14 ஆனி, ஆடி
கார் – மழை ஆகஸ்டு 15 முதல் அக்டோபர் 14 ஆவணி, புரட்டாசி
கூதிர் – குளிர் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 ஐப்பசி, கார்த்திகை
முன்பனி டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 14 மார்கழி, தை
பின்பனி பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 மாசி, பங்குனி

பொதுவாக இந்தியாவில் 6 பருவ காலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முன்-குளிர், குளிர், இளவேனில், கோடை,  மழை மற்றும் முதுவேனில் காலங்களாகும்.

வசந்த கால சம இரவு நாள் தொடங்குவதனை கொண்டாடும் கூகுள் டூடுல்

கட்டுரைக்கான உதவி – விக்கிப்பீடியா