Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

பிரசத்தி பெற்ற முதலை வேட்டைக்காரர் (The Crocodile Hunter) என அழைக்கப்படுகின்ற ஸ்டீவ் இர்வின் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது. வேட்டைகாரர் என்றால் முதல்லைகளை வேட்டை ஆடுபவராக அல்ல முதலைகள் முதல் ஊர்வன பாதுகாப்பாவராக தனது வாழ்நாளை 44 வயதில் நிறைவு செய்தவர்.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தாய் மற்றும் தந்தை ”பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற உயிரியல் பூங்காவில் பனியாற்றி காரணத்தால் உயிரினங்கள் மீதான ஈர்ப்பினால் வெகு விரைவாக ஊர்வன விலங்குகளை கையாளுவதில் திறமையானவராக விளங்கினார்.

Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

இந்த படத்தில் ஸ்டீவ் இர்வின், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

11 அடி நீளமுள்ள விஷமுள்ள பாம்பு  ஒன்றை முதன்முதலாகப் பிடித்தபோது ஸ்டீவ் இர்வினின் வயது 6 ஆகும். தொடர்ந்து விளங்குகள் மீது ஆர்வம் கொண்டிருந்த,  இவர் தன்னுடைய 9 வயதில் முதன்முறையாக முதலை வேட்டைக்கு தனது பயணத்தை தொடங்கினார். இவருடைய குடும்பம் நடத்தி வந்த பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க் பின்னாளில், அதாவது 1991 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஜூ’ (Australia Zoo) என்று பெயரை மாற்றி வைத்தார்.

1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்டீவ் இர்வினின் மனைவி டெர்ரி ரெயின்ஸ் (Terri Rains) அவர்களும் ஒரு விலங்குநல ஆர்வலர்தான்,  திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு இவர்கள் சென்ற இடம்தான் மிகுந்த சிக்கலானது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் இவர் கூறியிருப்பதாவது ” வட குயின்ஸ்லாந்தில் வேட்டைக்காரர் ஒருவர் பெரிய முதலை ஒன்றைக் கொல்ல முயல்வதாக  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  தேனிலவுக்கு பதிலாக, காட்டிற்கு சென்றோம். ஸ்டீவ் மற்றும் நானும் மிக மோசமான வேட்டைகாரரிடம் இருந்து அந்த முதலையை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அனுபவத்தை குறிக்கும் வகையில் `தி குரோக்கடைல் ஹன்ட்டர்’ என்ற ஆவணப் படமாக எடுத்தார்கள்.

Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
Sunshine Coast, Australia – June 25: (Europe And Australasia Out) Bob, Steve And Bindi Irwin Pose With 3Yr Old Alligator Russ At Australia Zoo On June 25, 2005 On The Sunshine Coast In Australia. (Photo By Meganslade/Newspix/Getty Images)

செப்டம்பர் 26 இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது என்றும் அட்டவண்ணைத் திருக்கை (stingray) என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் திருக்கை மீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். அவருடைய இதயம் இருக்கும் பகுதியில் தாக்கியதன் காரணமாக உடனடியாக இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீன் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. அவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

ஸ்டீவ் இர்வினின் 57வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை தனது முகப்பில் கொண்டு அலங்கரித்துள்ளது.

Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்