உலக மக்களை லைக்கின் கீழ் இணைக்கும் ஃபேஸ்புக் இணையதளத்தில் நான்கு வகையான மனிதர்கள் உலாவருவதாக பிரிகேம் யங் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபேஸ்புக்கில் 4 வகை மனிதர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

ஃபேஸ்புக் மனிதர்கள்

தினசரி 128 கோடிக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகின்ற முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை பெறுவதாக சமீபத்தில் இந்நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் 4 வகை மனிதர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தினசரி 35 நிமிடங்களுக்கு மேல் பேஸ்புக்கினை பயனாளர்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கின் பயன்படுத்துபவர்களின் நோக்கத்தை ஆராய்ந்த பிரிகேம் யங் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் பயனாளர்களை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தியுள்ளனர் , அதன் விபரம் பின் வருமாறு;-

1. உறவுகளை நாடும் மனிதர்கள்

உறவை விரும்புபவர்கள் மற்றவர்களின் அனைத்து பதிவுகளுக்கு, கருத்து சொல்வது, விருப்பங்கள் முதல் எந்த பதிவுக்கு மேற்கொள்வார்கள். குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

ஃபேஸ்புக்கில் 4 வகை மனிதர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

2. தங்களை பற்றி பரிமாறுபவர்கள்

புகைப்படங்கள், செய்திகள், தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு சுயவிபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பகிர்வதுடன் என்ன நடக்கின்றது என்பதனை அனைவருக்கும் பகிரவேண்டும், அதுபற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள்.

3. செல்ஃபீ பிரியர்கள்

எந்தநேரமும் செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவு செய்து கொண்டிருப்பார்கள், இவர்கள் அதிகப்படியான விருப்பம் மற்றும் கருத்துக்களை எதிர்பார்ப்பவர்களாக விளங்குவார்கள்.

4. சமூக ஆர்வலர்கள்

இரண்டாவது வகையை சார்ந்த மனிதர்கள் போல தங்களுடைய தனிப்பட்ட விடயங்களை அதிகம் பகிராமல் சமூகம் சார்ந்த நலன்களை பற்றியே அதிகமாக பேசுவார்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் 4 வகை மனிதர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இந்த நான்கு வகை மனிதர்களில் நீங்கள் எந்த வகை மனிதர் என மறக்காமல் கருத்தை பதிவு செய்யுங்கள்..!