கோடைக் காலம்

வடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் தொடங்குவதனை முன்னிட்டு கூகுள் தேடு பொறி பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்று வெளியிடப்படுள்ளது. மேலும் இதே நாளில் தெற்கு அரைக்கோளத்தில் குளிர் காலம் தொடங்குகின்றது.

நமது புவியில் 70-75 சதவீத மக்கள் வடக்கு அரைக்கோளத்தில் வசிக்கின்றனர். குறிப்பாக கண்டங்களின் அடிப்பைடையில் , ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களும், இந்தோனேசியாவின் ஒரு பகுதி தவிர்த்து பெரும்பாலான ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென் அமெரிக்கப் பகுதி மற்றும் மூன்றில் இரண்டு பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

கோடைக் காலம் டூடுல்

இந்திய துனைக் கண்டத்தை பொறுத்தவரை இதனை முதுவேனில் காலம் என குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மாதங்களில் இரண்டு மாதத்துக்கு ஒரு காலாமாக மொத்தம் 6 காலங்கள் உள்ளன. அவற்றில் ஆனி மற்றும் ஆடி மாதங்கள் முதுவேனில் என குறிப்பிடப்படுகின்றது.

பருவ காலம் ஆங்கில நாட்காட்டியில் தமிழ் மாதங்கள்
இளவேனில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 சித்திரை, வைகாசி
முதுவேனில் ஜூன் 15 முதல் ஆகஸ்டு 14 ஆனி, ஆடி
கார் – மழை ஆகஸ்டு 15 முதல் அக்டோபர் 14 ஆவணி, புரட்டாசி
கூதிர் – குளிர் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 ஐப்பசி, கார்த்திகை
முன்பனி டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 14 மார்கழி, தை
பின்பனி பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 மாசி, பங்குனி

பொதுவாக இந்தியாவில் 6 பருவ காலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முன்-குளிர், குளிர், இளவேனில், கோடை,  மழை மற்றும் முதுவேனில் காலங்களாகும்.