ஆல்ஃபாபெட் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்

கூகுள் உட்பட பல்வேறு சேவைகளுக்கு தலைமை நிறுவனமாக 2015 முதல் ஆல்ஃபாபெட் செயல்பட்டு வரும் நிலையில், இதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பாக ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கூகுளின் இனை நிறுவனரான லாரி பேஜ் மற்றும் தலைவராக செர்ஜி பிரின் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் இரண்டுக்கும் சேர்த்து ஒரே சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் வெளியிட்டுள்ள பதிவில், ஆல்பாபெட்டில் இணை நிறுவனர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். “இந்நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு சிறந்த வழி இருப்பதாக நாங்கள் நினைக்கும் போது நாங்கள் ஒருபோதும் நிர்வாகப் பதவிகளை விரும்புவதில்லை. ஆல்பாபெட் மற்றும் கூகிளுக்கு இனி இரண்டு தலைமை நிர்வாக அதிகாரிகளும், தலவைரும் தேவையில்லை ”என்று பேஜ் மற்றும் பிரின் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தனர். சுந்தர் கூகிளை வழிநடத்துவதற்கும், எங்கள் பிற  ஆல்பாபெட்டின் முதலீட்டை நிர்வகிப்பதற்கும் நிர்வாக பொறுப்பு மற்றும் பொறுப்பாளராக இருப்பார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் கூகுள் நிறுவனத்துடன் தீவிரமாக செயல்படவில்லை என்று பரவலாக தெரிவிக்கப்படுகின்றது. மாற்றாக இவர்கள் வேறு திட்டங்களில் செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.