ஆர்காம் வழங்கும் ஓணம் காம்போ பிளான் ரூ.101 அறிமுகம்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் புதிதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.101 கட்டணத்தில் சிறப்பு காம்போ பிளான் ஒன்றை அனைத்து வட்டங்களிலும் வெளியிட்டுள்ளது.

ஆர்காம் ஓணம் ஆஃபர்

அனில் அம்பானி கீழ் ஆர்காம் நிறுவனம் ரூ.101 கட்டணத்தில் வெளியிட்டுள்ள சிறப்பு காம்போ பிளானில் ரூ.50 டாக்டைம் வேலிடிட்டி மற்றும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் நிமிடத்திற்கு 25 பைசா கட்டணத்தில் வழங்கவதுடன் 1ஜிபி டேட்டா என 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகின்றது.

இந்த திட்டம் குஜராத் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களை தவிர மற்ற அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும். குறிப்பாக மும்பை, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய வட்டங்களுக்கு மட்டும் ரூ.111 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

சமீபத்தில் ஆர்காம் நிறுவனம் ரூ.25 கட்டணத்தில் ஒரு ஜிபி டேட்டா திட்டத்தை ஒரு நாள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்திருந்த நிலையில் சிறப்பு ஓணம் ஆஃபராக இதனை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் 2ஜி வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் தினமும் 1ஜிபி டேட்டா ரூ.365 கட்டணத்தில் வழங்குகின்றது.

Recommended For You