இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் : ரிலையன்ஸ் ஜியோ

இந்தியா தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் (TRAI) வெளியிட்டுள்ள இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் சேவை குறித்தான செய்தியில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி 17.42 Mbps வேகத்தை அதிபட்சமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

இணைய வேகத்தை சோதனை செய்யும் ஓக்லா வெளியிட்டிருந்த முடிவின் படி இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் சேவையாக ஏர்டெல் நிறுவனத்தை அறிவித்திருந்தது. தற்பொழுது டிராய் அமைப்பின் மை ஸ்பீடு வழியாக கடந்த டிசம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் சோதிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையிலே இந்தியாவின் மிக வேகமான 4ஜி சேவையை ஜியோ வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2016 முடிவில் ஏர்டெல் நிறுவனம் 11Mbps வேகத்தை வழங்கியது.இதே காலகட்டத்தில் ஜியோ 4ஜி  5Mbps மட்டுமே அதிகபட்சமாக இருந்தது என தெரிவித்திருந்த நிலையில் அதிரடியாக 17.5Mbps வேகத்தை ஜனவரி31, 2017 அன்று தொட்டுள்ளதாக தெரிகின்றது.

மேலும் 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்ளின் சராரிய வேகமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் வேகமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You