ஜியோ

34 கோடி பயனாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உயர்ந்துள்ளது. முதலிடத்தில் இருந்து வோடபோன் ஐடியா பயனாளர்கள் எண்ணிக்கை 33.1 கோடியாக உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலகட்டத்தில் நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாகவும், சர்வதேச அளவில் தனியாக ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ஜியோ விளங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 1 கோடி சந்தாதாரர்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது என்று முகேசு அம்பானி கூறினார். மேலும் அவை விரைவில் வரும் மாதங்களில் 50 கோடி பயனர்களை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைப்பிற்குப் பிறகு 40 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டராக வோடபோன் ஐடியா உருவானது. இருப்பினும், இணைக்கப்பட்ட பிறகு இருநிறுவனமும் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே வந்தது, பின்னர் ஜூன் மாதத்தின் முடிவில் வோடபோன் ஐடியாவை முந்தியுள்ளது.

சமீபத்திய டிராய் அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ ஜூன் 2019-யில் 33.1 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. ஜியோஅறிமுகம் செய்துள்ள ஜியோ ஜிகா ஃபைபர் பல்வேறு சலுகைகளை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.