இந்தியாவின் முதன்மையான தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் புதிய ஓபன் நெட்வொர்க் என்ற புதிய வசதியை வழங்க உள்ளது. மிக சிறப்பான முறையில் நெட்வொர்க் சிக்னலை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் அலுவல் இணையதளம் மற்றும் மைஏர்டெல் ஆப்ஸ் போன்றவற்றில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஓபன்நெட்வொர்க் பக்கத்தில் சென்று இந்திய வரைபடத்தின் வாயிலாக நீங்கள் மொபைல் சேவையை பயன்படுத்தும் பகுதியில் உள்ள தொலைதொடர்பு கோபரத்தின் செய்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனில் புகாரினை பதிவு செய்யலாம். இதன் வாயிலாக ஏர்டெல் தன்னுடைய நெட்வொர்க் கவரேஜினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சிக்னல் கோடுகள் போன்றவை சிறப்பான முறையில் உள்ளதா இல்லை எத்தனை சிக்னல் லெவல் உள்ளது. இணைய பயன்பாட்டில் தடை போன்ற அனைத்து விதமான குறைகளையும் வாடிக்கையாளர்கள் வாயிலாக பெற்று புதிய தொலைதொடர்பு கோபுரம் அமைக்க அல்லது , கோபுரத்தினை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் கால் டிராப்  25 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக கட்டுப்படுத்தியுள்ளது. இந்திய தொலைதொடர்பு டிராய் விதிகளின்ப்படி கால் டிராப் 2 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.