ஜியோ 4ஜி இலவச சேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.149 கட்டணத்தில் 4ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பேக்கினை அறிமுகம் செய்துள்ளது. 4ஜிபி டேட்டா வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்க உள்ளது.
ஏர்டெல் 4ஜி பிளான்
ஏர்டெல் நிறுவனம் கடந்த மூன்றாவது காலண்டில் 55 சதவீத இழப்பிட்டை சந்தித்துள்ள நிலையில் எனவே வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கும் நோக்கில் ஏர்டெல் செயல்பட்டு வருகின்றது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல்லின் புதிய 149 கட்டண முறையின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 4 ஜிபி வரையிலான 3G/4G டேட்டாவினை 28 நாட்களுக்கு பெற்று கொள்ள இயலும். மேலும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் 4 ஜிபிவரையிலான டேட்டாவினை பெறும் வாய்ப்புகளும் உள்ளது.
சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டிருந்த வரம்பற்ற அழைப்புகள் பிளான்களான 148 மற்றும் 349 விலை கொண்ட பேக்களில் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் வரை மட்டுமே அழைப்புகள் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் அதற்கு மேல் ரூ.148 பிளானில் அதன்பிறகு ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவும் , ரூ.349 பிளானில் அதன்பிறகு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தாலும் இலவச கால்கள் என விளம்பர செய்யப்பட்டதால் அபராதம் விதிக்க வேண்டும் என ஜியோ டிராய் அமைப்பிடம் முறையிட்டுள்ளது.