ஏர்டெல் இன்டர்நெட் டேட்டா 67 சதவீதம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் எதிரொலியின் காரணமாக ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் டேட்டாவினை கூடுதலாக வழங்க தொடங்கியுள்ளது. ஏர்டெல் முந்தைய டேட்டாவை விட கூடுதலாக 67 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 விலையில் வழங்கப்பட்டு வந்த  2ஜி 100எம்பி டேட்டா தற்பொழுது 145எம்பியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்  3ஜி , 4ஜி என அனைத்து இன்டர்நெட் டேட்டா கட்டணமும் அதே விலையில்தொடர்ந்தாலும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகின்றது. ரூ.655 விலையில் வழங்கப்படும் 3ஜிபி டேட்டா தற்பொழுது 5 ஜிபி ஆக உயர்வு பெற்றுள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் இந்தியா மற்றும் தெற்கு அசியா பகுதிக்கான இயக்குநர் அஜய் கூறுகையில் மாதந்திர பேக்குகளுக்கு கூடுதலான டேட்டா சலுகையை அனைத்து வாடிக்கையாளர்களும் பெறும் வகையில் மலிவான விலையில் அதிகப்படியான நேரத்தை மற்றும் வசதிகளை ஆன்லைனில் பெறலாம் என கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக ஐடியா நிறுவனமும் டேட்டாவினை 45 % வரை உயர்த்தியது.அதுபற்றி படிக்க ; ஐடியா டேட்டா அதிகரிப்பு 

Recommended For You