ஏர்டெல் சர்ப்ரைஸ் 30 ஜிபி 4ஜி டேட்டா ஆபரை பெறும் வழிமுறை இதோ..!

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ப்ரைம் கட்டண சேவைக்கு போட்டியாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஏர்டெல் சர்ப்ரைஸ்

இந்த சலுகையை பெறுவதற்கு உங்கள் ஏர்டெல் 4ஜி சிம் பயன்படுத்துகின்ற மொபைலில் மைஏர்டெல் ஆப் (Myairtel app) மூலமாக ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள் ஆப்பில் ‘க்ளைம் ப்ரீ டேட்டா’ (Claim Free Data) என்ற பேனரை கிளிக் செய்வதன் மூலம் இலவச தரவு பெற முடியும்.

image-fonearena

இந்த 30ஜிபி டேட்டா  3 மாத வேலிடிட்டி காலத்தில் வழங்கப்படும். மேலும் ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு  ரூ.345/- திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 1ஜிபி தரவந்து பகலில் 500 எம்பி மற்றும் இரவில் 500 எம்பி என இரண்டு பாகங்களாக பிரித்து வழங்கப்படும்.

Recommended For You