ஏர்டெல் பிக்பைட் சலுகையில் 1000ஜிபி டேட்டா ஆபர் பெறலாம்.!

ஜியோ பைபர் பிராட்பேண்ட் வருகை எதிர்கொள்ளும் வகையில் ஏர்டெல் பிராட்பேண்ட் பிரிவு ஏர்டெல் பிக்பைட் என்ற பெயரில் அதிகபட்சமாக 1000ஜிபி டேட்டா பெறும் வகையில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

ஏர்டெல் பிக்பைட் ஆபர்

போட்டியாளர்கள் மற்றும் வரவுள்ள ஜியோ பைபர் நிறுவனத்தை எதிர்கொள்ளும் வகையில் ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1000ஜிபி கூடுதல் டேட்டாவை மார்ச் 31, 2018 வரை வழங்க உள்ளது.

பிக்பைட் பிளான் விபரம்

ரூ.599 முதல் ரூ.1999 வரையிலான பிளான்களில் புதிய கம்பிவட இணைய இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிளானை தேர்வு செய்யலாம்.

www.airtel.in/broadband இணையத்திற்கு சென்று பெயர், மொபைல் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்த பிறகு உங்களை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு புதிய இணைப்பினை விரைவாக வழங்குவார்கள்.

ரூ.599 ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1,199, ரூ.1,599 மற்றும் ரூ.1,999 ஆகிய விலையில் கிடைக்கின்ற திட்டங்களில் வழங்கப்படுகின்ற மாதந்திர டேட்டா தீர்ந்த பிறகு 1000ஜிபி கூடுதல் டேட்டாவில் பயனார்கள் டேட்டாவை பெறலாம் என ஏர்டெல் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Recommended For You