இந்தியாவின் முன்னணி ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் தன்னுடைய போஸ்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் 30ஜிபி இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்டெல் வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா பெறும் வழிமுறை என்ன ?

ஏர்டெல் சர்ப்ரைஸ் டேட்டா

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஜியோ நிறுவனம் வழங்கி இலவச டேட்டா சலுகையை போன்றே தங்களது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 10ஜிபி என மூன்று மாதங்களுக்கு 30ஜிபி இலவச டேட்டா வழங்குவதனை அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இதோ போன்ற சலுகையை போஸ்பெயிட் பயனர்களுக்கு வழங்குவதாக மின்னஞ்சல் வாயிலாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

வருகின்ற மழைக்காலத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் வகையில் கூடுதலாக இலவச டேட்டா வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்த சலுகையை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் ஆப் வாயிலாக ஜூலை 1, 2017 முதல் இலவச டேட்டாவை கிளைம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா பெறும் வழிமுறை என்ன ?

சமீபத்தில் ஏர்டெல் பயனாளர்களுக்கு *121# சேவையில் தமிழ் உட்பட 11 மொழிகளில் இருப்பு, டேட்டா உள்பட பல விபரங்களை பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com