இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் 4ஜி தன்னுடைய சாம்சங் ஜே வரிசை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டாவை ரூ.250 விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் 4ஜி வழங்கும் 10ஜிபி டேட்டா  சலுகை பெறும் வழிமுறை என்ன ?

இந்த சலுகை சாம்சங் ஜே சீரிஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் பழைய மற்றும் புதிய சாம்சங் ஜே வரிசை 4ஜி வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் ரீசார்ஜ் டீலர் அல்லது http://offers.airtel.com/ பக்கத்தை உங்கள் ஏர்டெல் மொபைல் இன்டர்நெட் டேட்டா வழியாக தொடர்பு கொள்ளும் பொழுது உங்களுக்கு சலுகை குறித்த முழுவிபரங்களும் கிடைக்கும்.

4ஜி அல்லாத 3ஜி சேவை உள்ள இடங்களில் 1 ஜிபி பகல்நேர 3ஜி டேட்டா மற்றும் 9 ஜிபி இரவுநேர டேட்டா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மிக சிறப்பான ஏர்டெல் 4ஜி சேவையை சிறந்த சாம்சங் ஜே வரிசை மொபைல்களின் வாயிலாக வாடிக்கையாளர்கள் சிறப்பான அனுபவத்தினை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏர்டெல் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா சலுகையை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here