இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லூலார் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ. 53 மற்றும் ரூ. 92 என கட்டணத்தில் ஐடியா புல்லட் டேட்டா பேக்ஸ் ஆட் ஆன் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ஐடியா புல்லட் பேக்குகள்

ஜியோ நிறுவனம் ஸ்பீட் பூஸ்டர் என்ற பெயரில் ரூ.11, ரூ.21, ரூ.51, மற்றும் ரூ. 101 ஆகிய கூடுதல் டேட்டா திட்டங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரூ. 49 கட்டணத்தில் 3ஜிபி டேட்டா ஆட் ஆன் மூன்று நாட்கள் செல்லுபடியாகின்றது மற்றும் ரூ.92 கட்டணத்தில் 6ஜிபி டேட்டா ஆட் அன் திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனம், புல்லட் பேக்குகள் என்ற பெயரில் கூடுதல் டேட்டா வழங்கும் நோக்கத்திலான ஆட்-அன் திட்டங்களை செயற்படுத்தியுள்ளது . பொதுவாக இந்த ஆட்-அன் திட்டங்கள் ஐடியாவின் அன்லிமிடெட் டேட்டா  முறையில் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அன்லிமிடெட் டேட்டா பிளான்கள் பயன்படுத்தும் வாடிக்கையளர்கள் மற்றும் பயன்படுத்தாத பயனாளர்கள் என அனைவரும் இந்த பேக்குகளை பெறலாம். ரூ. 53 மதிப்பிலான ஐடியா புல்லட் டேட்டா பேக் 3ஜிபி டேட்டாவை 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது. இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டதாகும்.

ரூ. 92 மதிப்பிலான புல்லட் பேக் 6 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வந்துள்ள இந்த பிளான் 6ஜிபி டேட்டாவை 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது.

சமீபத்தில் இவற்றுக்கு எல்லாம் சவால் விடுக்கும் வகையில் டேட்டா சுனாமி என்ற பெயரில் பிஎஸ்என்எல் ரூ.98 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தமாக 39 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.