இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றாக விளங்கும் ஆதித்தியா பிர்லா குழுமத்தின், ஐடியா செல்லூலார் நிறுவனம் 21 நாட்கள் கால அளவினை கொண்ட ரூ.149 மதிப்பிலான திட்டத்தை டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது.

ஐடியா ரூ.149 பிளான்

சமீபகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில்,ஐடியா செல்லுலார் தனது பயனாளர்களுக்கு ரூ.149 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.149 மதிப்பிலான ரீசார்ஜை மேற்கொள்ளும்போது, 2G/3G/4G ஆகிய பிரிவுகளில் 21 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா வழங்குவதுடன், வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மட்டுமே அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. மேலும் 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு அதாவது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். தினசரி பயன்பாடு அல்லது வார பயன்பாட்டிற்கு பிறகு அழைப்புகளின் கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசா என வசூலிக்கப்படும்.

ஜியோ நிறுவனம் ரூ.149 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.