ஐடியா டேட்டா கார்டுகள் விலை குறைப்பு

அனைத்து ஐடியா வட்டங்களிலும் டேட்டா கார்டுகள் 2ஜி, 3ஜி, 4ஜி கட்டண விகிதங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணங்களின் மாறுதல் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

 ஐடியா செல்லூலார் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கட்டண விகதத்தில் இனைய இனைப்பு கிடைக்கும் நோக்கில் இந்திய முழுவதும் கட்டணத்தை குறைத்துள்ளது.

இதுகுறித்து ஐடியா தலைமை மார்கெட்டிங் அலுவலர் சசி கூறுகையில் வாடிக்கையாளர்கள் சிறப்பான அனுபவத்தினை பெறும் வகையில் 45 % வரையிலான கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 2ஜி, 3ஜி, 4ஜி கட்டணங்கள் ரூ.8 முதல் ரூ.225 வரையிலான மாறுபட்ட விலைகளில் நிர்னையிக்கப்பட்டுள்ளது. 4ஜி ,3ஜி டேட்டா ரூ.22க்கு  65 எம்பி ஆக இருந்த டேட்டா தற்பொழுது 90MB டேட்டா பெறலாம் மூன்று நாட்களுக்கு மட்டும்.

Recommended For You