செல்போன் டவர் கதிர்வீச்சை அறிய தரங் சஞ்சார் இணையதளம்

இந்திய தொலைதொடர்பு துறை புதிதாக செல்போன் கோபுரங்கள் கதிர்வீச்சை அறிவதற்கான பிரத்தியேக தரங் சஞ்சார் இணையதளத்தை தொடங்கியுள்ளது.

 தரங் சஞ்சார் இணையதளம்

  • செல்போன் டவர் கதிர்வீச்சை அறிவதற்கான இணையதளம்.
  • இந்த தளத்தில் 4 லட்சத்து 40 ஆயிரம் டவர்கள் மற்றும் 14.5 லட்சம் பேஸ் நிலையங்களின் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
  • மின்காந்த கதிர்வீச்சு பற்றி விபரங்களை பெறலாம்.

தரங் சஞ்சார் இணையதளத்தில் நாட்டில் உள்ள 4 லட்சத்து 40 ஆயிரம் மொபைல் டவர்கள் மற்றும் 14.5 லட்சம் பேஸ் நிலையங்களின் மின்காந்த கதிர்வீச்சு அளவு பற்றி தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தை தொடங்கி வைத்து பேசி மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சின்ஹா கூறுகையில் மொபைல் டவர் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சினால் மனிதர்களின் உடல்நலத்துக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை என உலக சுகாத மையம் 25,000 க்கு மேற்பட்ட ஆய்வாளர்களை கொண்டு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தவறான புரிதல்கள் மற்றும் பழங்கதைகளுக்கு இந்த தளம் முற்றுபுள்ளி வைக்கும் என தெரிவித்துள்ளார்.

இரு சிம் பயனர்கள் மற்றும் பயன்படுத்தாத சிம் என மொத்தமாக நாடு முழுவதும் 100 கோடிக்கு மேற்பட்ட மொபைல் பயனர்கள் உள்ளதாக அமைச்சர் சின்ஹா தெரிவித்துள்ளார்

சமீபத்தில் குவாலியர் பகுதியில் 42 வயதுள்ள நபருக்கு டவர் கதிர்வீச்சு பாதிப்பினால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அங்கே அமைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் செல்போன் டவரை 7 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

இந்த தளத்தில் கூடுதல் வசதியாக வாடிக்கையாளர்கள் விரும்பினால் அருகாமையில் அமைந்துள்ள செல்போன் டவர் தொடர்பான கதிர்வீச்சு பற்றி ஆய்வை மேற்கொள்ள வேண்டுமெனில் இது குறித்தான தகவலை பெற ரூ 4000 செலுத்தி  பதிவு செய்து கொண்டால் இதற்கு உண்டான ஆய்வினை மேற்கொள்ளப்படும் என தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படுவதில்லை என உறுதியாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தரங் சஞ்சார் தளத்தை பார்வையிட – https://tarangsanchar.gov.in/EMFPortal/Home

Recommended For You