ஜியோவுக்கு அதிர்ச்சி..! ஐடியா 4ஜி ஃபீச்சர் போன் வருகையா ?

2ஜி சேவை எதிர்காலத்தில் காணமல் போகும் நிலை உருவாகும் வகையில் 4ஜி சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்குவும் ஐடியா நிறுவனம் குறைந்த விலை 4ஜி பீச்சர் போனை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஐடியா 4ஜி பீச்சர் போன்

விலையில்லா ஜியோபோன் ஒன்றை ரூ. 1500 டெபாசிட் தொகையுடன் வழங்க ஜியோ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும், இது போன்ற குறைந்த விலை ஃபீச்சர் ரக மொபைல் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமல்ல மொபைல் நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதனால் மைக்ரோமேக்ஸ், கார்பன், இன்டெக்ஸ் ஆகிய இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் மொபைல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் மொபைலுக்கு பல்வேறு சிறப்பு இலவச அழைப்பு சலுகைகள் மற்றும் டேட்டா போன்றவை பன்டில் ஆபர் போல வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தற்போது இந்த வரிசையில் ஐடியா நிறுவனமும் இணைந்துள்ளதால் லைவ்மின்ட் செய்தி தெரிவிக்கின்றது. சமீபத்தில் இதற்கு பேட்டியளித்த ஐடியா செல்லூலார் நிர்வாக இயக்குநர் ஹிமான்சு கபனியா கூறுகையில் 2ஜி முதல் 4ஜி வரையிலான சேவையை பயன்படுத்தும் வகையில் இரு சிம் கார்டு ஆப்ஷனுடன் கூடிய குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் மொபைலை ரூ. 2500 பட்ஜெட் விலைக்குள் தயாரிக்க மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐடியா-வோடஃபோன் விரைவில் இணைக்கப்பட்டாலும், இந்த 4ஜி ஃபீச்சர் போன் ஐடியா நிறுவனத்தின்  கீழ் மட்டுமே தயாரிக்கப்படுவதாக குறிப்பட்டுள்ளார்.

எனவே, ஐடியா டெலிகாம், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஜியோஃபோனுக்கு எதிராக களமிறங்கியுள்ள நிலையில் வோடஃபோன் , பிஎஸ்என்எல் நிறுவனங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை செயல்படுத்தும் என உறுதியாகவில்லை.

மேலும் டெலிகாம் செய்திகள் வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். எம்மை ஃபேஸ்புக்கில் பின் தொடர –> fb.com/gadgetstamilan

Recommended For You