இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம்சேவை வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் ஜியோ ஃபை 4ஜி டாங்கில் விலையை ரூ.999-லியிருந்து ரூ.1999 ஆக அதிகரித்திருப்பதுடன் சிறப்பு டேட்டா சலுகை மற்றும் கேஸ்பேக் வவுச்சர்களை வழங்கியுள்ளது.

ஜியோ ஃபை 4ஜி டாங்கில்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம் 2ஜி, 3ஜி மொபைல் போன் பயனாளர்கள் இணையம், இலவச காலிங் வசதி மற்றும் கணினி வாடிக்கையாளர்கள் இணைய சேவையை பெறும் வகையில் ஜியோஃபை கருவி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ரூ.1999 விலையில் வெளியிடப்பட்ட ஜியோஃபை டாங்கில் சில மாதங்களுக்கு பிறகு ரூ,999 ஆக குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.1999 ஆக அதிகரிக்கப்பட்டு கூடுதல் சலுகையாக ரூ.1295 மதிப்பிலான டேட்டா சலுகையை வழங்கியுள்ளதை தவிர ரூ.2300 மதிப்பில் கேஸ்பேக் சலுகையை பேடிஎம், அஜியோ, மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் வாங்கும் பட்சத்தில் பெறலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1295 மதிப்பிலான டேட்டா சலுகையை பெறும் வழிமுறையை காணலாம். புதிய ஜியோ சிம் மற்றும் டாங்கில் வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று விதமான ரீசார்ஜ் தேர்வுகளை மேற்கொள்ளலாம்.

8 முறை ரூ.149 கட்டணத்தில்நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா நன்மைகளை பெறலாம், 6 முறை ரூ.199 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா நன்மைகளை பெறுவதுடன் , நான்கு முறை ரூ.299 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா நன்மைகளை பெறலாம். இந்த திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற உள்ளூர் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.

இதைத்தவிர ரூ.2300 மதிப்பிலான சலுகையை பெறுவதற்கு பேடிஎம் தளத்தில் ஃபிளைட் டிக்கெட் புக் செய்தால் ரூ.800 கேஸ்பேக், அஜியோ இணையதளத்தில் ஆடைகளை வாங்கினால் ரூ.500 கேஸ்பேக் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கினால் ரூ.1000 என மூன்று வவுச்சர்களும் இணைந்து ரூ. 2300 கேஸ்பேக் மற்றும் ரூ.1295 டேட்டா சலுகை என மொத்தமாக ரூ.3295 வரை கேஸ்பேக் சலுகை கிடைக்க உள்ளது.

விரைவில், இந்த புதிய திட்டம் செயற்பாட்டுக்கு கொண்டு வர ஜியோ திட்டமிட்டுள்ளது.