இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஜியோ 4ஜி சேவையில் வழங்கப்படும் இலவச சலுகைகள் டிசம்பர் 31,2016 என்ற நிலை மாறி மார்ச் 31 ,2017 வரை ஜியோ சேவை இலவசமாக கிடைக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

reliance-jio-happy-new-year-offer

வெல்கம் ஆஃபர் சலுகைகள் ஜியோ அறிவிப்பின்படி டிசம்பர் 31, 2016யில் முடிவடைந்தாலும் டிராய் அமைப்பின் கனக்கின் படி டிசம்பர் 3, 2016 அன்றுடன் முடிவடைவதனால் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வருட பிறப்பு சலுகையாக மார்ச் 31, 2017 வரை இலவச அழைப்புகள் , குறுஞ்செய்தி மற்றும் அன்லிமிட்டேட் டேட்டா (1ஜிபி 4ஜி டேட்டா தினமும் அதற்கு மேல் 128 Kbps வேகத்தில் டேட்டா கிடைக்கும்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 4ஜி முக்கிய அம்சங்கள் குறித்து அம்பானி தெரிவிக்கையில்

1. முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் ,வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

2. கடந்த 90 நாட்களில் ஜியோ எண்ணிக்கை சராசரியாக தினந்தோறும் 6 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

3. 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்ற ஜியோ (தற்பொழுது 3 மாதங்களில் 52 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது.)

4. சாதரன பிராட்பேன்ட் பயன்பாட்டாளரை விட 25 சதவீத கூடுதல் டேட்டாவை ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

5. ஜியோ நிறுவனம் eKYC (know your customer) வாயிலாக 2 லட்சம் கடைகளில் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதனை 4 லட்சம் கடைகளாக மார்ச் 31,2017க்குள் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

6. கடந்த 3 மாதங்களில் 900 கோடி வாய்ஸ் அழைப்புகள் நெட்வொர்க் பிரச்சனையால் இந்தியாவின் மூன்று முன்னனி நெட்வொர்க்குகளால் தடை செய்யப்பட்டுள்ளது.

7. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 80 சதவீதமும் , மோசமான அனுபவத்தை 20 சதவீத வாடிக்கையாளர்களும் பெற்றுள்ளனராம்.

8.  இந்தியாவில் 92 சதவீத தொலைதொடர்பு கோபுரங்கள் வாயிலாக சிறப்பான அதி வேக டேட்டா சேவையை வழங்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 8 % இடங்களில் உள்ள டவர் பிரச்சனை விரைவாக சரி செய்யப்பட உள்ளதாம்.

9. JIO HAPPY NEW YEAR OFFER என்ற பெயரில் இனி ஜியோ சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. ஜியோமணி வாலட் வாயிலாக ஒவ்வொரு இந்தியரும் தங்ளுடைய பாகெட்டில் ஏடிஎம் மையங்களை வைத்திருக்கும் நிலையை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

11. இலவச சேவையில் ஜியோ  JioPlay, JioOnDemand, JioBeats, JioXpressNews, JioSecurity, JioDrive, JioMags and JioMoney போன்ற ஆப்ஸ்களும் அடங்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here