மொபைல் நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி : ஜியோ புரட்சி

ஜியோ புரட்சியின் காரணமாக இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் சுமார் 10 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜியோ புரட்சி

  • ஜியோ இலவச சேவை 6 மாதங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றது
  • சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் ஜூன் வரை சலுகைகளை ஜியோ நீட்டித்துள்ளது.
  • வாய்ஸ் மற்றும் டேட்டா வருவாய் 37,284 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

குரல் வழி சேவை, டேட்டா போன்ற பிரிவுகளில் தொலைதொடர்பு நிறுவனங்களின் வரு‌வாய் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலண்டின் முடிவில் 37 ஆயிரத்து 284 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

6 மாதங்களுக்கு மேலாக இலவச சேவையை வழங்கி வருகின்ற ஜியோ நிறுவனம் 10 கோடிக்கு மேற்பட்ட 4ஜி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில் இலவச அழைப்புகள் , டேட்டா ,எஸ்எம் எஸ் போன்றவற்றை வழங்கி வருவதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இந்ந இலவச சேவை அமைந்துள்ளதால் மற்ற மொபைல் நிறுவனங்களின் அழைப்பு மற்றும் டேட்டா சேவை போன்றவை சரிந்துள்ளதால் மொத்த டெலிகாம் ஆப்ரேட்டர்களின் வருவாய் 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஜியோவின்  சம்மர் சலுகைகளுக்கு அதிரடி தடையை விதித்தாலும் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜூன் வரை இலவச சேவை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளதால் மேலும் வருவாய் சரிவினை மற்ற நிறுவனங்கள் சந்திக்க உள்ளது.

Recommended For You