ஜியோ 4ஜி இலவச சேவை 3ஜி மொபைலுக்கு வருகை ?

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ 4ஜி சிம் சேவை 3ஜி மொபைல்களிலும் செயல்படும் வகையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 3ஜி மற்றும் 2ஜி மொபைல் வைத்திருப்பவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகும்.

டிசம்பர் 31, 2016 வரை உள்ள வெல்கம் சலுகை நிறைவடைவதனை ஒட்டியும் அதனை தொடர்ந்து வரவுள்ள ஜியோ ஹேப்பி நியூ இயர் சலுகைகளை 3ஜி மற்றும் 2ஜி வாடிக்கையாளர்களும் பெறும் வகையிலான அறிவிப்பினை டிசம்பர் மாத கடைசி தினங்களில் அறிவிப்புகள் வெளியாகலாம் என ஜீ நியூஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது ஜியோஃபை டிவைஸ் வாயிலாக 2ஜி மற்றும் 3ஜி மொபைல்களில் இலவச அழைப்புகள் மற்றும் இன்ட்ர்நெட் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். ஆனால் தனியாக 3ஜி மொபைலில் ஜியோ சிம் இயங்கும் வகையில் இல்லை.

4G LTE மற்றும் VoLTE ஸ்மார்ட்போன் கருவிகளில் மட்டுமே இயங்கி வரும் ஜியோ சிம் 3ஜி ஸ்மார்ட்போனில் இயங்கும் வகையிலான புதியதோர் ஆப்ஸ் ஒன்றை ஜியோ உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதுகுறித்தான அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You