டிராய் எனப்படும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய செயலி டிராய் மைகால் ஆப் வாயிலாக மேற்கொள்ளும் வாய்ஸ் அழைப்பின் தரத்தை பதிவு செய்ய உதவி செய்கின்றது.

டிராய் மைகால் ஆப்

அழைப்புகளின் தரத்தை மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டை ஆய்வு செயவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைகால் செயலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் மேற்கொள்ளும் குரல் வழி அழைப்புகளின் தரத்தை உடனடியாக டிராய் அமைப்புக்கு அனுப்பி வைக்க உதவுகின்றது.

ஒவ்வொரு அழைப்பிற்கும் 5 நடசத்திர மதிப்பீட்டை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை ஒவ்வொரு அழைப்புகளுக்கு அல்லது 10 அழைப்புகளுக்கு ஒரு முறை போன்ற தேர்வகளில் அழைப்பின் தரத்தை பதிவு செய்வதுடன் உள்ளரங்கில் மற்றும் வெளிப்புறத்திலும் பயணித்தின் பொழுது என மூன்று விதமாக பதிவு செய்யலாம்.

இதில் அழைப்புகளின் தரம் கால் இழப்பு ,வாய்ஸ் தரம், மற்றும் இரைச்சல் போன்றவற்றின் குறைகளை பதிவு செய்யலாம். இந்த செயலியின் உதவிகளின் வாயிலாக அழைப்பின்  தரத்தை பதிவு செய்வதனால் நெட்வொர்க்குகளின் மீது அழைப்பின் தரத்தை உயர்த்த டிராய் நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக அமையும்.

டூ நாட் டிஸ்டர்ப் 2.0

இரண்டாவது வெர்ஷன் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள டூ நாட் டிஸ்டர்ப் 2.0 பதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஸ்பேம் மெசெஞ் மற்றும் அழைப்புகளை தடுப்பதுடன் டெலி விளம்பரங்களை வரைமுறை செய்யவோ அல்லது முழுமையாக கட்டுப்படுத்தவோ முடியும்.

பல்வேறு வசதிகளை வழங்குகின்ற டூ நாட்  டிஸ்டர்ப் 2.0 ஆப் வாயிலாக குறிப்பட்ட எண்ணை தடுக்கவும் முடியும்.

டிராய் அமைப்பின் மற்றொரு செயலியான மைஸ்பீட் ஆப் வாயிலாக மொபைல் தரவின் வேகத்தை மதிப்பீடலாம்.