உங்கள் இணைய இனைப்பின் வேகத்தை சோதிக்க டிராய் மைஸ்பீட் என்ற பெயரிலான ஆப் வாயிலாக உங்களுடைய 3ஜி மற்றும் 4ஜி ஆதரவு இணைய இனைப்பின் வேகத்தை அறிந்து கொள்ள இயலும்.  இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வாயிலாக மைஸ்பீட் வெளியிடப்பட்டுள்ளது.

மைஸ்பீட் ஆப் உதவியுடன் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் நிறுவனத்தின் இணைய வேகத்தை எளிமையாக அறிந்துகொள்ள இயலும். மைஸ்பீட் ஆப் வாயிலாக சோதனை செய்யப்படும் இணைய வேகத்தினை நேரடியாக டிராய் அமைப்புக்கு பகிர்ந்து கொள்ள முடியும். இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை குறைபாடுகளை டிராய் அமைப்பு ஒழுங்க செய்ய எளிமையாக இருக்கும்.
மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்ஸ் மிக விரைவாக துல்லியமாக செயல்பட்டு இணைய வேகத்திறனை காட்டுகின்றது . சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தபட்ச இணைய வேகம் ஏர்டெல் , ரிலையனஸ் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு 512Kbps ஆக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
டிராய் மைஸ்பீட் ஆப்ஸ் பிளேஸ்டோர் மற்றும் அரசின் மைசேவா ஆப் ஸ்டோர் வாயிலாக  பயனர்கள் தரவிறக்கி கொண்டு உங்களுடைய இணைய வேகத்தை சோதனை செய்து டிராய் அமைப்புக்கு தெரியப்படுத்துங்கள்.