ரிலையன்ஸ் குழுமத்தின் தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர்காம் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.193 கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ. 193 மட்டுமே : ஆர்காம்

ஆர்காம் டேட்டா பிளான்

அனில் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆர்காம் தொலைதொடர்பு நிறுவனம் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதியதோர் டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது.

ரூ. 193 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா என்ற அளவில் வழங்குகின்றது.இந்த டேட்டா பிளான் வேலிடிட்டி காலம் 28 நாட்களாகும், மேலும் இந்த பிளானில் எவ்விதமான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

தினமும் 1ஜிபி டேட்டா ரூ. 193 மட்டுமே : ஆர்காம்

சமீபத்தில் ஆர்காம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 239 பிளானில் 6ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள், மற்றொரு பிளான் 333 கீழ் 30ஜிபி டேட்டா மற்றும்1000 நிமிட இலவச அழைப்புகளும் வழங்குவதாக அறிவித்திருந்தது.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் நிறுவனம் சௌக்கா 444 பிளானில் தினமும் 4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கும், 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளுக்கு பிஎஸ்என்எல் 666 போன்ற பிளான்களை வெளியிட்டுள்ளது.