யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனம் பதஞ்சலி , பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி சிம் கார்டுகளை அறிமுகம் செய்து ஜியோ உட்பட ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக களமிங்கியுள்ளது.
பதஞ்சலி சிம்
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுர்வேத முறைப்படியான தயாரிப்புகளை வழங்கி வருகின்ற மிக வேகமாக விற்பனையாகின்ற அன்றாட நுகர்வோர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், சுதேசி பொருட்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சுதேசி நிறுவனமாக விளங்கும் பொது தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து சிம் கார்டினை வெளியிட்டுள்ளது.
பதஞ்சலி பல்வேறு முன்னணி நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனங்களுக்கு மிக கடுமையான சாலினை வழங்கி வருகின்ற நிலையில் தொலை தொடர்பு சார்ந்த நுழைவு , மேலும் டெலிகாம் துறையில் அடுத்தகட்ட பரபரப்புகளுக்கு தயாரிகி வருவதனை உணர்த்துகின்றது.
முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் சந்தை முற்றிலும் மாறிவிட்ட நிலையில் பதஞ்சலி எவ்விதமான மாற்றங்களை கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
பதஞ்சலி சிம் பிளான்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதேசி சம்ரித்தி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் மொத்தம் மூன்று விதமான பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும் என 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.792க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும் என 180 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1584க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என 365 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ Vs பதஞ்சலி பிளான் – ஒப்பீடு அட்டவனை
Operator | Plan | Benefits | ||||
டேட்டா | அழைப்புகள் | எஸ்எம்எஸ் | ரோமிங் | வேலிடிட்டி | ||
Patanjali | ரூ. 144 | தினமும் 2GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 30 நாட்கள் |
Jio | ரூ. 98 | தினமும் 2GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 28 நாட்கள |
Operator | Plan | Benefits | ||||
டேட்டா | அழைப்புகள் | எஸ்எம்எஸ் | ரோமிங் | வேலிடிட்டி | ||
Patanjali | ரூ. 792 | தினமும் 2GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 180 |
Jio | ரூ.1999 | 125GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 180 |
Operator | Plan | Benefits | ||||
டேட்டா | அழைப்புகள் | எஸ்எம்எஸ் | ரோமிங் | வேலிடிட்டி | ||
Patanjali | ரூ.1584 | தினமும் 2GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 365 |
Jio | ரூ.4999 | 350GB | இலவசம் | இலவசம் | இலவசம் | 360 |
பதஞ்சிலி சிம் வாங்குவது எப்படி ?
முதற்கட்டமாக பதஞ்சலி ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிம் கார்டினை பதஞ்சலி ஊழியர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கொண்டு வாங்கலாம்.
பதஞ்சலி சிம் கார்டு சலுகைகள்
சுதேசி சம்ரித்தி சிம்கார்டை வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக சிம்கார்டை வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகளில் 10% சலுகை தரப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.