குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 விலையில் வரம்பற்ற அழைப்புகளை 5 தினங்களுக்கு வழங்க உள்ளது.  இந்த பேக்கில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ள இயலும்.

பிஎஸ்என்எல் அன்லிமிடேட் இலவச கால் பேக் ரூ.26 அறிமுகம்

26 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகையில் வரம்பற்ற இலவச அழைப்புகளை நாடு முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கு வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்த பேக் ஜனவரி 25 முதல் ஜனவரி 31 ,2017 வரை மட்டுமே கிடைக்கும்.

மேலும் Combo 2601 மற்றும் Combo 6800 என இருசலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் Combo 2601 வழியாக ரீசார்ஜ் செய்யும் பொழுது  ரூ. 2600 டாக்டைமும் கூடுதலாக ரூ.1300 கிடைக்கும். 2600 ரூபாய் இருப்பு வரையறையற்றதாகவும் , ரூ,1300 இருப்பு மூன்று மாத கால வேலிடிட்டி உடன் கிடைக்கும்.

இவற்றில் Combo 6800 வழியாக ரீசார்ஜ் செய்யும் பொழுது  ரூ. 6800 இருப்பு மற்றும் கூடுதலாக  ரூ.6800 கிடைக்கும். ரூ.6800 ரூபாய் இருப்பு வரையறையற்றதாகவும் , அடுத்த ரூ. 6800 இருப்பு மூன்று மாத கால வேலிடிட்டி உடன் கிடைக்கும்.

 

பிஎஸ்என்எல் 149

இதுதவிர நேற்று பிஎஸ்என்எல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு  ரூ.149 விலையில் ஒரு மாத கால எந்த நெட்வொர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை தினமும் 30 நிமிடங்களுக்கு அமைத்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. மேலும் மற்றொரு ரூ.439 விலையில் வரம்பற்ற அழைப்புகள் சலுகையை மூன்று மாதங்களுக்கு பெற முடியும். இதனுடன்   கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பி அளவிலான டேட்டாவும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சேவைகளை அனைத்து புதிய வாடிக்கையாளர்களும் மற்றும் பிற நிறுவன சேவையில் இருந்து போர்ட் செய்து பிஎஸ்என்எல் சந்தாதார்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here