இந்திய பொது தொலை தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் விரைவில் இணையப் போவதாக எம்டிஎன்எல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைப்பு  விரைவில்

பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல்

  • பிஎஸ்எனெல் இந்தியா முழுவதும் தொலை தொடர்பு சார்ந்த சேவைகளை வழங்கிவருகின்றது.
  • எம்டிஎன்எல் டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே சேவையை வழங்குகின்றது.
  • வருகின்ற ஜூன் மாதம் இணைப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகலாம்.

சமீபத்தில் வோட்போன் -ஐடியா இனைப்பு , ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் இணைப்பு , ஏர்டெல் டெலிநார் நிறுவதனத்தை வாங்கியதை போன்ற இரு பொது தொலை தொடர்பு நிறுவனங்களும் நாடு முழுவதும் சேவையின் தரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடேட்ட் மற்றும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் என இரண்டின் இணைப்பும் மேற்கொள்ளப்பட உள்ளதாக எம்டிஎன்எல் இயக்குநர் பிடிஐ செய்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இணைப்பு குறித்தான அதிகார்வப்பூர்வ அறிவிப்பை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வருகின்ற ஜூன் மாதத்துக்கு முன்னதாக வெளியடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்டிஎன்எல் பிரிவு மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் ப்ரீபெய்டு,போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேண்ட போன்ற சேவைகளை  வழங்கி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here