பிஎஸ்என்எல் வழங்கும் மின்னனு பரிவர்த்தனை சலுகை விபரம்

டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத சலுகையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பணமில்லா மின்னனு பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் பிஎஸ்என்எல பொது தொலை தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது 0.75 சதவீத சலுகையை பெறலாம்.

இந்த சலுகையை பெற கண்டிப்பாக பிஎஸ்என்எல் இணையதளம் மற்றும் ஆப்ஸ் வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த சிறப்பு சலுகை போஸ்பெயிட் , ப்ரீபெய்டு , லேண்ட் லைன் என அனைத்து வாடிக்கயாளர்களுக்கும் பொருந்தும்.

இந்த 0.75 சதவீத விலை சலுகை 22.12.2016 முதல் 31.3.2017 வரை மட்டுமே கிடைக்கும்.

Recommended For You