இந்தியாவின் பொது தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனியார் சேவை வழங்குநர்களுக்கு இணையான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட போஸ்ட் FUP இணைய வேகத்தை நொடிக்கு 2எம்பி என்ற அளவில் நிர்ணயம் செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல் FUP இணைய வேகம் அதிகரிப்பு..!

பி.எஸ்.என்.எல் FUP இணைய வேகம்

சமீபத்தில் பிஎஸ்.என்.எல் நிறுவனம் தன்னுடைய பிராட்பேண்டு வாடிக்கையாளர்களுக்கு இணைய வேகத்தில் கூடுதலான வேகத்தை வழங்கும் வகையில் உயர் வேக டேட்டா தீர்ந்த பிறகு வழங்கப்படும் அடிப்படை இணைய வேகத்தை 2Mbps என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் பிராட்பேண்டில் ரூபாய் 675 கட்டணத்துக்கு மேல் உள்ள கம்பிவட இணைப்பு பெற்றுள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உயர் வேக டேட்டா தீர்ந்த பிறகு தற்போது வழங்கப்படுகின்ற நொடிக்கு 1எம்பி என்ற அளவில் உள்ள வேகத்தை நொடிக்கு 2எம்பி என்ற அளவில் நிர்ணயம் மாற்றியமைத்துள்ளது.

பி.எஸ்.என்.எல் FUP இணைய வேகம் அதிகரிப்பு..!

BBG Combo ULD 675 பிளானில் 5ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அதன் வேகம் 5Mbps என்ற வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன்பிறகு வழங்கப்படுகின்ற வேகம் 2Mbps என்ற அளவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற பிளான்களான BBG ULD 795, BBG ULD 999 மற்றும் BBG ULD 1149 போன்றவற்றுக்கு அடிப்படை டேட்டா தீர்ந்த பிறகு வழங்கப்படுகின்ற வேகம் 2Mbps என்ற அளவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் BB249 திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த இணைய வேகத்தை பொருத்தாது.

சமீபத்தில் பிஎஸ்என்ல் நிறுவனம் தங்களுடைய செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சௌக்கா என்ற திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா வழங்குவதனை உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here