இந்தியாவின் பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் தங்களுடைய வாடிகையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சௌகா 444 திட்டத்தின் கீழ் தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகின்றது.
பிஎஸ்என்எல் சௌகா 444
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வழங்கப்பபட்டுள்ள BSNL Chaukka stv 444 பிளானில் தினமும் 4ஜிபி டேட்டா பயன்பாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளங்கள்..!
தினமும் 4ஜிபி டேட்டா
நாள் ஒன்றுக்கு தினமும் 4ஜிபி என்ற டேட்டா அளவில் 3ஜி டேட்டா வழங்கப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் வழங்குவதை விட மூன்று மடங்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகின்றது.
90 நாட்கள்
ரூ. 444 கட்டணத்தில் பெறப்படுகின்ற இந்த சௌக்கா பிளான் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும்.தினமும் 4ஜிபி என்றால் மொத்தமாக 360ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
வாய்ஸ் கால் இலவசமா ?
இல்லை ,அழைப்புகளுக்கு உங்களுடைய பிளான் விதிமுறைகளின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பிளான் முழுமையான டேட்டா பயனாளர்களுக்கு மட்டுமே.
போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ?
இல்லை,போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படவில்லை,இந்த பிளான் ப்ரீபெயிடு சந்தாதர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
எங்கே ரீசார்ஜ் செய்ய ?
பி.எஸ்.என்.எல் இணையதளம், ஆன்லைன் வால்ட்கள்,ரீசார்ஜ் ரீடெயிலர்கள் என அனைவரிடமும் ரீசார்ஜ் செய்யலாம்.
இந்தியா முழுவதும்
நாடு முழுவதும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல் ப்ரிபெயிட் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.