புதிய மொபைல் எண் இணைப்பு பெற ஆதார் கட்டாயம்

புதிய மொபைல் எண் இணைப்பு பெறவும் மற்றும் பயன்பாட்டில் உள்ள பழைய மொபைல் எண்களுக்கும் சேவையை தொடந்து பெற வேண்டுமெனில் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் எண்

தொலை தொடர்பு சேவையை வழங்குகின்ற நிறுவனங்கள் ஆதார் சார்ந்த e-KYC (வாடிக்கையாளரின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள்) தங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டும் என அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, ஆதார் இணைக்கப்பட்ட e-KYC மூலம் மொபைல் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரிக்கும் அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஒப்பதலை தொடர்ந்து தொலை தொடர்பு சேவையை வழங்குநர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக நமது நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் இருந்து  ஆதார் விவரங்கள் பெறப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தேவைப்படும் ரூ.2,500 கோடியை, தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கும். இணைய சேவையை மட்டுமே பெறுவதற்காக மட்டுமே வாங்கப்பட்ட மொபைல் இணைப்புகள், மாற்று எண்கள் மூலம் சரிபார்க்கப்படும்.

ஆதாரை அடிப்படையாகக் கொண்ட  e-KYC செயல்பாடுகள், பிப்ரவரி 6, 2018-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You