விற்பனை செய்யப்பட்ட மொபைல்களில் பேனிக் பட்டன் ஆப்ஷன் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைத்தொடர்பு அமைப்பின் அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பயன்பாட்டில் உள்ள மொபைல்களுக்கு பேனிக் பட்டன் ஆப்ஷனை ஏற்படுத்துவது சாத்தியமற்ற நிலை எனவே புதிய மொபைல்களில் மட்டுமே சாத்தியம் சாம்சங் , ஆப்பிள் மற்றும் இன்டெக்ஸ் போன்ற நிறுவனங்களின் கருத்தாக இருந்த வந்த நிலையில் தற்பொழுது பழைய மொபைல்களில் பேனிக் பட்டன் இணைக்கும் திட்டம் கைவிடப்படலாம் என தெரிகின்றது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்போன்களில் பேனிக் பட்டன் நிரந்தர அம்சமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவசரகால தேவைக்கு 112 என்கின்ற எண்ணை பயன்படுத்தவும் தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. பேனிக் பட்டன் வாயிலாக அனைவருக்கும் பாதுகாப்பினை உறுதிபடுத்த இயலும் .குறிப்பாக பெண்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்கள் பேனிக் பட்டனை பயன்படுத்தும்பொழுது அவர்களுக்கான அவசர உதவி விரைவாக கிடைக்கும். மேலும் பேனிக் பட்டன் மொபைல்போனின் ஆன் அல்லது ஆஃப் பட்டனை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் அனைத்தும் மொபைல்போன்களில் ஜிபிஎஸ் வசதியை நிரந்தர அம்சமாக ஏற்படுத்த தொலைத்தொடர்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.