மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் எம்என்பி வசதியை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு பெறும் வகையிலான நடவடிக்கையை ஜியோ 4ஜி முன்னெடுத்து வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பெற எம்என்பி சேவையில் மாறலாமா ..?

எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் 3 மாத வரையறையற்ற இணைய டேட்டா, அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்கி  வருகின்றது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் லைஃப் மொபைல்களுடன் எண்ணற்ற பன்டில் சலுகையும் கிடைக்கின்றது,
இதுதவிர சாம்சங் , ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஜியோஃபை உடன் ஹெச்பி கணினி வாடிக்கையாளர்களும் பெறலாம். தற்பொழுது மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனங்கள்  மற்றும் தொலைத் தொடர்பு வட்டங்களை மாற்றிக்கொள்ளும் வகையிலான மொபைல் எண் போர்ட் எனப்படும் எம்என்பி சேவையை வழங்கும் நோக்கில் ஜியோ நிறுவனம் கோல்கத்தாவில் தன்னுடைய பணியாளர்களின் வாயிலாக சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 
அடுத்த சில வாரங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எம்என்பி வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது.  வருகின்ற சுதந்திர தினத்தில் அதிகார்வப்பூர்வமான சேவையை ரிலையன்ஸ் ஜியோ4ஜி சேவை தொடங்கலாம் என எதிர்பார்ப்படுகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பெற எம்என்பி சேவையில் மாறலாமா ..?
ஜியோ 4ஜி சேவையின் எதிரொலியாக ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் டேட்டா சலுகையை அதிகரித்திருந்ததை முன்பே பதிவிட்டிருந்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here