ரூ.1 க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

ரிலையன்ஸ ஜியோ தந்த போட்டியால் பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் விலையை குறைத்துள்ள நிலையில் பிஎஸ்என்எல் ரூ.249 விலையில் 300ஜிபி வரையிலான டேட்டாவை வழங்குகின்றது. அதாவது ரூ.1 க்கு 1 ஜிபி டேட்டா வழங்க உள்ளது.

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அன்லிமிட்டே BB249 (Unlimited BB 249) பிளானில் 300 ஜிபி வரையிலான டேட்டாவை ஒரு மாதம் முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமீபத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகளை ஏற்படுத்தும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர ஞாயிறு கிழமைகளில் லேண்ட்லைன்களுக்கு இலவசமாக அழைப்புகளை செய்யலாம்.

ஜியோ வை-ஃபை ஹாட்ஸ்பாட் இணைப்பில் ரூ.50 க்கு 1ஜிபி டேட்டா வழங்க உள்ளதை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய கட்டன விகிதங்களை குறைத்துள்ளனர்.  ஏர்டெல் , வோடோஃபோன் , ஐடியா , ஏர்செல் , பிஎஸ்என்எல் ,எம்டிஎஸ் என அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கட்டன குறைப்பினை வழங்க தொடங்கியுள்ளது.

Recommended For You