இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சந்தையில் ரூ.200க்கு குறைவான கட்டணத்தில் சிறந்த 4ஜி டேட்டா பிளான்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஏர்டெல்,வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவன பிளான்களை ஓப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

சிறந்த டேட்டா பிளான்கள் : ரூ.200

ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு சந்தையில் மிக கடுமையான குறைந்தபட்ச டேட்டா திட்டங்களை செயற்படுத்த தொடங்கி நிலையில் போட்டியாளர்களும் , அதற்கு ஈடான திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஏர்டெல் ரூ.149 & ரூ.199

நாட்டின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல், ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.

ரூ.199 திட்டத்தில் தினமும் தினமும் 1.4 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

வோடபோன் ரூ.199

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் இந்தியா, வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்களுக்கு 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன், ரோமிங் இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஐடியா ரூ.199

ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை 28 நாட்கள் வழங்குவதுடன், 100 எஸ்எம்எஸ-களை நாள்தோறும் வழங்குகின்றது. இந்த திட்டம் ரோமிங் சமயத்திலும் பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ.149 & ரூ.198

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.

ரூ.198 திட்டத்தில் தினமும் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

கூடுதலாக ஜியோபோன், வாடிக்கையாளர்களுக்கு  ரூ.49 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.