மிக கடுமையான போட்டிகள் நிறைந்த துறையாக மாறியுள்ள தொலைத்தொடர்பு துறையில் வோடஃபோன் தன்னுடைய 3ஜி மற்றும் 4ஜி பயனர்களுக்கு ரூ. 244 கட்டணத்தில் 70 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ரூ. 244-க்கு 70ஜிபி  3ஜி/4ஜி டேட்டா வழங்கும் வோடஃபோன் ஆஃபர்..!

வோடஃபோன் ஆஃபர்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற வோடஃபோன் தங்களுடைய 3ஜி மற்றும் 4ஜி என இரு பிரிவு வாடிக்கையாளர்களுக்கும் ஆஃபரை வெளியிட்டுள்ளது.

ரூ. 244-க்கு 70ஜிபி  3ஜி/4ஜி டேட்டா வழங்கும் வோடஃபோன் ஆஃபர்..!

 

ரூ. 244 கட்டணத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி பெற்ற இந்த புதிய பேக்கினை மை வோடஃபோன் ஆப் வழியாக பெறலாம். இந்த பிளானில் தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் வோடபோன் அழைப்புகள் வழங்குகின்றது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு உங்கள் பிளானின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.9.70 டாக்டைம் வழங்குகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் முதன்முறையாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 70 நாட்கள் மற்றவர்களுக்கு 35 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.

ரூ. 244-க்கு 70ஜிபி  3ஜி/4ஜி டேட்டா வழங்கும் வோடஃபோன் ஆஃபர்..!

மற்றொரு பிளான் ரூ. 346 கட்டணத்தில் தினமும் 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்பட்டு 56 நாட்கள் கால அளவு என வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் என எந்த நெட்வொர்க் அழைப்புகளுக்கும், தினசரி அதிகபட்சமாக 300 நிமிடம் மற்றும் ஆனால் வாரத்திற்கு அதிகபட்சமாக 1200 நிமிடம் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திலும் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.17.30 டாக்டைம் வழங்குகின்றது.

ரூ. 244-க்கு 70ஜிபி  3ஜி/4ஜி டேட்டா வழங்கும் வோடஃபோன் ஆஃபர்..!

ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தன்  தனா தன் ரூ. 399 கட்டணத்தில் 84 நாட்களுக்கு தினமும் ஒரு ஜி.பி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் பயன்பாட்டினை வழங்குகின்றது.

தொடர்ந்து டெலிகாம் செய்திகளை படிக்க எங்களை பேஸ்புக்கில் தொடர fb.com/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here