ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களுடைய 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.291 ரீசார்ஜ் பிளானில் 14ஜிபி டேட்டா வழங்க உள்ளது.
பிஎஸ்என்எல் 3ஜி
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.156, ரூ 198, ரூ 291 மற்றும் ரூ 549 பிளான்களில் கூடுதலான டேட்டா வசதியை ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 17 வரை மட்டுமே கிடைக்கும்.
- ரூ. 156 பேக்கில் 7GB மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி பெறலாம்.
- ரூ. 196 பேக்கில் முன்பு 3ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது 7ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
- ரூ. 291 பேக்கில் 14GB மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி பெறலாம்.
- ரூ. 549 பேக்கில் 30GB மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி பெறலாம்
மேலும் ரூ 190 டாக்டைம் பேக் ரீசார்ஜ் செய்தால் ரூ 220 டாக்டைம் கிடைக்கும் மற்றும் ரூ 490 டாக்டைம் பேக் ரீசார்ஜ் செய்தால் ரூ 600 டாக்டைம் பெறலாம். இந்த சலுகைகள் அனைத்தும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 17 வரை மட்டுமே கிடைக்கும்.