ரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்

இந்தியாவின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், சென்னை வட்டத்தில் உள்ள பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்  FTTH (Fibre-to-the-Home) பயனாளர்களுக்கு 100 Mbps வேகத்தில் ரூ.4,999 கட்டணத்தில் 1500ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்

தனியார் பிராட்பேண்ட் நிறுவனங்களான ஏக்ட் , செர்ரிநெட் போன்ற நிறுவனங்கள் 100 Mbps வேகத்தில் இணையத்தை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் குறிப்பிட்ட சில வட்டங்களில் இந்த வேகத்தை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை வட்டத்தில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 4,999 விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பிளானில் அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் இணையத்தை 1500 ஜிபி டேட்டா வரை பெறலாம், அதன் பிறகு 2 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். கூடுதல் சலுகையாக 5MB இடவசதியுடன் கூடிய ஒரு இலவச இமெயில், மற்றும் இலவச சேட்டிக் ஐபி அட்ரஸ் ஆகியவற்றுடன் பிஎஸ்என்எல் எண்களுக்கு இலவச அழைப்புகளை வழங்குகின்றது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனம் உயர்ரக பிரிமியம் ரூ. 4,999 திட்டத்தை தவிர மற்ற பிளான்களான ரூ. 999 முதல் ரூ. 2999 வரையிலான பிளான்களில் பல்வேறு மாறுபட்ட டேட்டா அளவுடன் வேகத்தை பெற்று விளங்குகின்றது.

ரூ.999 பிளான் 60 Mbps வேகத்தில் 250ஜிபி டேட்டா இணையம் , மேலும் ரூ. 1,299, ரூ. 1,699, ரூ. 1,999, ரூ. 2,999 ஆகிய திட்டங்கள் 80 Mbps வேகத்தில் இணையத்தை பெறலாம்.  FUP  எனப்படும் வரம்பற்ற டேட்டா வேகம் அதன் பிறகு பிளானுக்கு ஏற்ற வகையில் வழங்கப்படுகின்றது.

ரூ. 1,299 பிளானில் 400 ஜிபி உயர்வேக டேட்டா, ரூ. 1,699 பிளானில் 550 ஜிபி உயர்வேக டேட்டா, ரூ. 1,999 பிளானில் 800 ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் ரூ. 2,999 பிளானில் 800 ஜிபி உயர்வேக டேட்டா வழங்கப்படுகின்றது.