வோடஃபோன்-ஐடியா கூட்டணி – ஜியோ எதிரொலி

இந்தியாவின் 2வது இடத்தில் உள்ள வோடாஃபோன் நிறுவனமும் மூன்றாவது இடத்தில் உள்ள ஐடியா நிறுவனம் இணைந்து செயல்படுவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது. வோடஃபோன்-ஐடியா இணையும் பட்சத்தில் இந்தியாவின் முதன்மையான தொலை தொடர்பு நிறுவனமாக உருவாகும்.

வோடஃபோன்-ஐடியா கூட்டணி

ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த இணைப்பினை செய்ய விரும்புவதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோடோஃபோன் உலகின் பல்வேறு நாடுகளில் தங்களுடைய சேவையை வழங்கி வருகின்றது.

இந்தியாவின் பிர்லா குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஐடியா நிறுவனம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மார்ச் இறுதிக்குள் இந்த இருநிறுவனங்களின் இணைப்பு பற்றி விபரங்கள் வெளியாகும்.

Recommended For You