வோடோஃபோன் இலவச கால் பிளான் அறிமுகம்

ஜியோ வருகையால் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் டெலிகாம் ஆப்ரேட்ர்கள் அன்லிமிடேட் இலவச அழைப்புகளை வோடோஃபோன் ரூ.149 யில் வழங்கி உள்ளது. ரூ.344 விலையில் 1ஜிபி 4ஜி டேட்டாவை வழங்கியுள்ளது.

ஐடியா மற்றும் ஏர்டெல் போன்று வோடோஃபோன் நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.144 அல்லது ரூ.149 (வட்டங்களை பொருத்து மாறுதல்) ரீசார்ஜ் செய்தால் வரையறையற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி இலவச அழைப்புகள் மற்றும் 300எம்பி 4ஜி டேட்டா பெறலாம்.

அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்காக ரூ.344- ரூ.349 (வட்டங்களை பொருத்து மாறுதல்) ரீசார்ஜ் செய்தால் வரையறையற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி இலவச அழைப்புகள் மற்றும் 1ஜிபி 4ஜி டேட்டா பெறலாம்.

இதுகுறித்து வோடோஃபோன் தெரிவிக்கையில் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களும் சிறப்பான வகையில் சேவையை பெறும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.145 அல்லது ரூ.345 பிரீபெய்டு ரீசார்ஜில் இலவச அழைப்புகளை பெறலாம். ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.148 அல்லது ரூ.348 பிரீபெய்டு ரீசார்ஜில் இலவச அழைப்புகளை பெறலாம். ஏர்செல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத இலவச அழைப்புகளை பெறலாம். வருகின்ற ஏப்ரல் 31 , 2017 வரை ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகையை வழங்கியுள்ளது.

Recommended For You