இந்தியாவின் மிக வேகமான 1Gbps வேகத்தில் இயங்கும் கம்பி வழி பிராட்பேண்ட் இணைய சேவையை ஆக்ட் பைபர்நெட் ஹைத்திராபாத்தில் தொடங்கியுள்ளது. 1TB FUP விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்ட் பைபர்நெட்

  • 1000Mbps அதாவது 1Gbps வேகத்தில் இயங்கும் இணைய சேவையை பெறலாம்.
  • ரூ.5999 மாதந்திர திட்டத்தில் 1TB  டேடாடவும் அதன் பிறகு 10Mbps வேகத்தில் வழங்கப்படும்.
  • அமெரிக்கா, ஜப்பான் , சீனா , கொரியா போன்ற நாடுகளில் இதுபோன்ற சேவை உள்ளது.

முதற்கட்டமாக ஹைதராபாத் மாநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிக வேக இணையம் அடுத்த சில மாதங்களில் 11 நகரங்களில் விரிவாக்கப்பட்ட உள்ளதாக ஆக்ட்(ACT) தெரிவித்துள்ளது. ரூபாய் 5999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் மாதந்திரம்  1TB (டெராபைட்) பயன்படுத்தலாம். அதன் பிறகு எஃப்யூபி வாயிலாக அதிகபட்சமாக  10Mbps வேகத்தில் இணையத்தை பெறலாம்.

ஒரு முழு திரைப்படத்தை வெறும் விநாடிகளில்  பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலாக வேகத்தை பெற்றுள்ள இந்த சேவையில் பயனர்கள் மிக சிறப்பான இணைய அனுபவத்தை பெறலாம்.

இதுபோன்ற சேவையை ஜியோ நிறுவனம் மும்பை மாநகரில் சோதித்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கதாகும். இந்த இணைய வேகத்தின் அடிப்படையிலே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டிடிஎச் சேவையும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.