10 நிமிடம் இலவச அழைப்புகள் வோடோஃபோன் பயனர்களுக்கு

வோடோஃபோன் டெலிகாம் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடம் இலவச அழைப்புகளை பெறும் வசதியை வழங்கியுள்ளது. திடீரென அழைப்புகள் துண்டிக்கப்பட்டால் இந்த இலவச அழைப்புகளை பெறலாம்.

அழைப்புகளில் பேசிகொண்டிருக்கும் பொழுது திடீரென நெட்வொர்க் பிரச்சனை , சரியான சிக்னல்கள் கிடைக்காமல் அழைப்புகள் துண்டிக்கப்பட்டால் உடனடியாக 10 நிமிடம் அழைப்புகளை இலவசமாக எவ்விதமான கேள்விகளும் இல்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடம் அழைப்பை பெறும் வழிமுறை

உங்கள் வோடோஃபோன் மொபைலில் இருந்து BETTER என டைப் 199 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் அழைப்பு நெட்வொர்க் பிரச்சனையால் துண்டிக்கப்பட்டிருந்ததால் அடுத்த அரை மணிநேரத்தில் இலவச அழைப்புகள் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும். 10 நிமிட இலவச அழைப்பினை லோக்கல் வோடோஃபோன் எண்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

சமீபத்தில் வோடோஃபோன் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையார்களுக்கு 67 சதவீத கூடுதல் இன்டர்நெட் டேட்டாவை வழங்கியுள்ளது. 

Recommended For You