4ஜி சேவையை தொடர்ந்து களம் காண காத்திருக்கும் 5ஜி அலைகற்றை ஏலத்தை டிராய் விரைவில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விற்பனை ஆகாத 700 MHz அலைவரிசையும் மறுஏலத்துகு வரலாம்.

5G அலைக்கற்றை ஏலத்தை தொடங்க அரசு முடிவு

 5G அலைகற்றை

முதற்கட்ட ஏலத்தில் 3300 MHz  மற்றும் 3400 Mhz அலைகற்றைகள் ஏலத்தில் விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த சில மாதங்களில் ஏலம் விடப்பட உள்ள இந்த அலைகற்ற ஏலத்தில் மேலும் விற்பனை செய்யப்படாமல் உள்ள 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, மற்றும் 2500 MHz மேலும் 700 MHz போன்றவைகளும் ஏலத்திற்கு வரலாம்.

2020 ஆம் ஆண்டில் பயணர்களுக்கு வழங்க திட்டமிப்பட்டுள்ள 5ஜி சேவையில் இணைவேகம் குறைந்தபட்சம் 1Gbps ஆக இருக்கலாம். 2025க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுளதாம்.

பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல்  நிறுவனம்  நோக்கியாவுடன் இணைந்து 5ஜி தலைமுறைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.