ஏர்டெல் டெலிகாம்

பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும் 5ஜி சேவை சாத்தியப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சுனில் மிட்டல் தனது உரையில், கடந்த சில மாதங்களில் கிடைத்த அனைத்து உலகளாவிய முதலீடுகளுடனும் 5ஜி சேவையை பெறுவதில் முன்னணியில் இந்தியா பயனடையும் என்று கூறினார். ஆனால் இது சாத்தியப்பட, சாதனங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக 5ஜி சாதனங்கள் கிடைப்பதும் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும்.  5ஜி மொபைல் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் போது சாத்தியப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

2 முதல் 3 ஆண்டுகளுக்குள், 5ஜி இந்தியாவின் மொபைல் பிராட்பேண்ட் இடத்தில் நிலையானதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.