புதிய சிம் கார்டு வாங்க ஆதார் எண் தேவையில்லை - மத்திய அரசு

இந்தியா தொலைத் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய சிம் கார்டு வாங்குபவர்களை ஆதார் எண் தேவை என கட்டாயப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே சிம் கார்டு வாங்க ஆதார் அவசியமில்லை என உறுதியாகியுள்ளது.

சிம் கார்டு வாங்க

மத்திய அரசின் அறிக்கையில் வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, மொபைல் போனிற்கு புதிய சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் கார்டு இல்லையென்றாலும் சிம் கார்டு வழங்கலாம்.

அதற்கு மாற்று அடையாள சான்றாக ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பே உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஆதார் எண் கட்டாயம் என வற்புறுத்தக்கூடாது என உத்தரவிட்டும் தொடர்ந்து ஆதார் எண் கேட்பது தவறு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.